Viral Video: 'அவங்க சொன்னனால தான் அப்டி பேசுனேன்' தர்ஷா & சன்னி லியோன் ஆடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய சதிஷ்..
இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம பிரம்மாண்டமாக நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்னி லியோன் யாரும் எதிர்பாராத விதமாக பச்சை நிற பட்டுப்புடவையில் அழகு தேவதை போல் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு குறைவில்லாத உடையில் வந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சதீஷ் மேடைக்கு வந்து பேசும்போது, பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டு புடவை கட்டி வந்திருக்காங்க.. ஆனால் கோயம்புத்தூரில் இருந்து வந்த பொண்ணு எப்படி வந்திருக்காங்க பாருங்க? என இருவருடைய ஆடையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியது.
நடிகர் சதீஷின் பேச்சுக்கு எதிராக நடிகை சின்மயி, இயக்குனர் நவீன் போன்ற பலர் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம் என்றும் அதனை நீங்கள் கூறாதீர்கள் என பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், அடித்துப் பிடித்துக் கொண்டு தற்போது நடிகர் சதீஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சதீஷ், நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய தோழி, அவர் என்னிடம் பேசும்போது சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என எண்ணி, நான் கவர்ச்சி உடையில் வந்தேன். ஆனால் அவர் பட்டுப்புடவை அணிந்து வந்ததால் அப்செட் ஆகி விட்டேன் என வருத்தத்துடன் கூறியதாகவும், பின்னர் இதனை அவர் மேடையில் தன்னை கூற சொன்னதாகவும் இதன் காரணமாகவே நான் ஆடை குறித்து மேடையில் பேசினேன் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
பெண்கள் ஆடை அணிவது அவர்களுடைய சுதந்திரம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என சதீஷ் கூறியுள்ளார். மேலும் நான் பேசிய இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் பல நல்ல விஷயங்களையும் மேடையில் பேசுகிறேன் அதுவும் பேசப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
OG la dharsha vum palla kaatittu than irunthuruku 🤡🤦 pic.twitter.com/XnFRFVf1Od
— பூமர் (@poochaanD) November 8, 2022
Dharsha moonjiye maari pochu 🚶
— பூமர் (@poochaanD) November 7, 2022
Intha peruchaaliya Valikama kolunga frands 😊👍🏻 pic.twitter.com/YuhaudgSaP