சாண்டி மாஸ்டர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்.. வைரலாகும் போட்டோஸ்!

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கல் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

அதன் பின்னர், டிஷ்யூம், சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு2, போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். மேலும், அவரது குடும்பத்தினரிடம் கூட நல்ல நட்பு பாராட்டி வருகிறார் காஜல். சமூக வலைத்தகளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வந்தவர் சாண்டி மாஸ்டர். 2005ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் choreographer ஆக தனது பயணத்தை தொடங்கியவர். இவர் கலா மாஸ்டரின் ஸ்டுடென்ட் & அசிஸ்டென்ட். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பல சீசன்களில் choreographer ஆக இருந்து வந்த இவர், நடுவராகவும் இருந்தார்.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

மேலும், கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வந்தார். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற இவர், தனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் நெஞ்சங்களை வென்றார். இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டி - சில்வியா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

அதனை பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் காஜல். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தைகளுடன் காஜல் பசுபதி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விவாகரத்து பெற்ற பின்னரும் சாண்டியுடனும், அவரது குடும்பத்தினருடனும் காஜல் பசுபதி நட்புடன் பழகி வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

sandy master ex wife kajal pasupathy visits sandy master and clicks photo with his children and wife

Share this post