ச்ச கஷ்டமா இருக்கு.. கண்கலங்க வைக்கும் சமந்தா நிலை? ஒரு கையில் ட்ரிப்ஸ்.. மற்றொரு கையில் பயிற்சி.. ஷாக் வீடியோ

samantha workout with trips in one hand and working out in another hand video getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha workout with trips in one hand and working out in another hand video getting viral

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

samantha workout with trips in one hand and working out in another hand video getting viral

நடிகை சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் யசோதா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார்.

samantha workout with trips in one hand and working out in another hand video getting viral

சமந்தா உடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

samantha workout with trips in one hand and working out in another hand video getting viral

இந்நிலையில், தன்னுடைய ஜிம் பயிற்சியாளருடன், சமந்தா எடுத்த சில புகைப்படத்தையும், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், ‘எனக்கு பிடித்த ஜிலேபிக்கு தகுதியான அளவுக்கு நான் ஒர்க் அவுட் செய்தேன் என்று எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஒருபோதும் நினைத்ததில்லை.

அவர் யசோதாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சியை நினைத்து பெருமைப்பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து ஜிலேபி கொடுத்தார். அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் இருந்ததால் தான் இதனை என்னால் செய்ய முடிந்தது. இடைவிடாது எனக்கு ஊக்கமளித்தார்’ என கூறியுள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post