தன் முன்னாள் காதலர் நடித்த ‘காந்தாரா’ குறித்து ராஷ்மிகாவின் பதில்.. கொதித்தெழுந்த கன்னட ரசிகர்கள்!
Hombale Films தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. கன்னட மொழியில் வெளியான இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட திரையுலகையே புரட்டி போட்ட படம் என்றே சொல்லலாம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த அளவிற்கு ஆழமான கதை மற்றும் நடிப்பு கொண்டு உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து ரஷ்மிகா பேட்டி ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் 2017ம் ஆண்டு வெளியான “கிர்க் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படமானது 50 கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என டாப் நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமாக உள்ளார்.
தற்போது, பிரபல நடிகரான அமிதாப் பச்சனுடன் இணைந்து “குட் பாய்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்து விட்டார். இப்படி இருக்கும் போது நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோபமடைந்துள்ளார். அதாவது, இந்தியா முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை பார்த்து விட்டிர்களா என்று பேட்டியில் செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார். இதனால் கோவமடைந்த கன்னட ரசிகர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவை கொச்சை வார்த்தைகளினால் சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இனி கன்னட மக்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது எனவும் தங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி தயாரித்திருந்த திரைப்படமான “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்பாடத்தின் போதே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. அதன் பின்னர் சில காரணங்களினால் ரிஷப் ஷெட்டியும் நடிகை ராஷ்மிகாவும் பிரிந்து விட்டனர். அப்போது இவரை கடுமையாக ரிஷப் ஷெட்டியின் ரசிகர்கள் விமர்ச்சித்திருந்தனர். இந்நிலையில் இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கியிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை இதனால்தான் பார்க்கவில்லை என்று கன்னட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசவார்த்தைகளினால் திட்டி வருகின்றனர்.