'விவாகரத்துக்கு பின் ஜீவனாம்சமாக 250 கோடி வாங்கினேன்..' சமந்தாவின் வைரல் வீடியோ
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம், நடிகை சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போது மாமனார் வீட்டில் இருந்து சமந்தாவுக்கு 250 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த தொகையை சமந்தா வாங்கவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பாலிவுட்டில் பிரபலமான கரண் ஜோகர் அவரின் நிகழ்ச்சிக்கு சென்ற சமந்தா இதுகுறித்து காமெடியாக ஒரு ரூமர் பரவியதாக கூறியுள்ளார். நான் ஜீவனாம்சமாக 250 கோடி வாங்கியிருக்கிறேன். தினமும் என் கதைவை திறந்து காத்திருக்கிறேன், வருமானத்துறையினர் வருவார்களோ என்று எதார்த்தமாக கூறியுள்ளார். இப்படி அவர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
250 cr alimony for an indepent and working wife?
— Kanpuria Launda (@KanpuriaLaunda) November 29, 2022
Is this the women's empowerment you are advocating @narendramodi ji? pic.twitter.com/sLJfYnPkBp