சுனிதாவுக்காக அஸ்ஸாமுக்கு சென்ற சந்தோஷ்.. அடுத்த நட்சத்திர ஜோடியா? வைரலாகும் வீடியோ!
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுனிதா. இதனைத் தொடர்ந்து, ஜோடி நம்பர் 1 சீசன் 8 & 9, ஜீ தமிழ் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இப்படி நடன கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார்.
இதன் பின்னர், தமிழ் அவ்வளவு பேச தெரியாத சுனிதா, இவர் பேசும் தமிழே இவருக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது. இதன் மூலம், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் விரும்பி ரசிக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
இறுதியாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுனிதா - சார்பேட்டா பரம்பரை பட புகழ் சந்தோஷ் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆனதாக அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் ரொமான்டிக்காக டான்ஸ் காஃபி எடுத்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதில், காதல் பாட்டுக்கு லவ் expressions உடன் அவர்கள் செயல்கள் செம லைக் மற்றும் கமெண்டுகளை குவித்தது. இதனால் இவர்கள் காதலிப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது அசாமில் உள்ள சுனிதாவை காண சந்தோஷ் நேரில் சென்றுள்ளார். அவருக்கு அசாமில் ராஜ விருந்து வைத்துள்ளார் சுனிதா. இதனை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார். வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதுடன் ஜோடி பொருத்தம் சூப்பர், லவ் கன்பார்ம், கல்யாணம் எப்போ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.