சினிமாவில் இருந்து விலகும் சமந்தா? கமிட் ஆன படத்தில் இருந்தும் விலகல்..

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்து வரும் இவர், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஒருக்கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

மையோசிட்டிஸ் என்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாதாக சொல்லப்பட்டது.

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும், அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்பந்தித்த படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்து வரும் ’குஷி’ என்ற படத்தை மட்டும் அவர் முடித்து விடுவார் என்றும் அவர் நடிக்க இருந்த ‘பேமிலிமேன் 2’ படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

நடிகை சமந்தா ஒரு சில ஆண்டுகள் முழுமையாக ஓய்வு எடுத்து தனது உடல் நலத்தை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தா முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திக்கு சமந்தாவின் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சமந்தா ஒரு இடைவெளிக்கு பின் மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரை உலகிற்கு வருவார் என்றும் அவருக்கான இடம் திரையுலகில் எப்போதுமே இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

samantha going to take a break in cinema for her health condition and quitting information getting viral on social media

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ’யசோதா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவர் நடித்து முடித்த ’சாகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post