சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி? காரணம் இதுதானா? வெளியான தகவல்!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாரி 2, NGK போன்ற திரைப்படங்களிலும், மலையாள மொழியில் ப்ரேமம், காளி, அதிரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னரே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
தென்னிந்திய திரையுலகத்தில் முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில், விராடபர்வம், கார்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது, மாவீரன் படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, இதனை தொடர்ந்து, பட வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும், எனவே இவர் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஜார்ஜியாவில் தன்னுடைய மருத்துவ படிப்பை படித்த இவருக்கு, ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
தற்போது, தன்னுடைய மருத்துவ படிப்பு யாருக்கும் பயன் இல்லாமல் போய் விட கூடாது என, தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம். இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் பரபரப்பாக ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறப்படும் எனவே, சாய் பல்லவி மருத்துவ பணிக்காக திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதே நேரம் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், சாய் பல்லவி மருத்துவ பணியை கவனித்துக் கொண்ட, நடிப்பிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.