நடிகை மீனாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர் தானா? காட்டுத்தீ போல பரவும் தகவல்
1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.
அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். கணவர் வித்யாசாகர் உயிர் இழந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது மீனா அந்த துயரத்திலிருந்து மீண்டு தனது தோழிகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.
தற்போது, நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்கிறார் என செய்திகள் பரவுகின்றன. ஆனால் மீனா தரப்பில் இந்த செய்தி குறித்து முற்றிலும் மறுத்துள்ளனர், இது வதந்தியே என்று கூறியுள்ளனர்.