ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறேன் - சிபு சூர்யன் ! அவரே வெளியிட்ட காரணம் இதோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் ரோஜாவும் ஒன்று. டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுக்கு இளசுகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை ஏராளமான ரசிகர்கள்.

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

குறிப்பாக, இந்த சீரியல் தொடரில் லீட் ரோலில் நடித்து வரும் சிபு சூர்யன்(அர்ஜுன்) மற்றும் பிரியங்கா நல்காரி(ரோஜா) இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல விறுவிறுப்பான கதையுடன் ரசிகர்கள் வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் குறித்த தற்போது செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

தற்போது, அர்ஜுன் ரோலில் நடித்து வரும் சிபு சூர்யன் திடீரென ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை எனக்கான பகுதி முழுவதையும் நடித்து கொடுத்து விடுவேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

Goodbye சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என் மனதிற்கு நெருக்கமானது.

உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கும் நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை entertain செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை” என சிபு சூர்யன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Roja serial hero sibbu suriyan exit from serial announcement getting viral on social media

Share this post