'நா காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு கடைசி தங்கச்சி பிறந்தது' தனது குடும்ப கதையை கூறிய ஆர்ஜே பாலாஜி !
RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.
இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.
இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.
இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வித்தியாசமான கதை, கலகலப்பான டயலாக் என மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் கூட சமயத்தில் நடந்தது.
சாதாரண கஷ்டப்படுகிற குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆர்ஜே பாலாஜி, காமெடி நடிகர், ஹீரோ, இயக்குநர் என உயர்ந்திருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு தம்பியும் மூன்று தங்கச்சிகளும் உள்ளனர். அவரது அப்பா மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் அப்பாவை போலவே குடும்ப பொறுப்பை விட்டு சில காலம் ஒதுங்கி விட்டதாகவும், அதன் காரணமாக அடிக்கடி சென்னையின் பல இடங்களில் வாடகை வீட்டை மாற்றி இருக்கிறோம் என பழைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது குடும்பத்தை பற்றிய மேலும், சில ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆவதை போல எங்கள் வீட்டில் ஒரு புதிய குழந்தை பிறக்கும். நான் கல்லூரி படிக்க அட்மிஷன் வாங்கும் போது எங்கம்மா கைக் குழந்தையுடன் வந்ததை பற்றி எனக்கு எந்த கவலையும் பெரிதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜிக்கு திருமணம் ஆகி அவரும் அவரது மனைவியும் குடும்ப கஷ்டத்தை நினைத்து 5 ஆண்டுகளுக்கு குழந்தையை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விட்டனர். ஆனால், திடீரென ஆர்ஜே பாலாஜியின் தாத்தா இறந்ததும் மனைவிக்கு குழந்தை நின்று விட்டதாம். தாத்தா தான் குழந்தையா வராருன்னு நினைச்சி பெத்துக்கிட்டோம். ஆனால், அந்த கர்ப்ப கால நாட்கள் எங்களுக்கு பெரும் சோதனையாகவே அமைந்தது என்று கூறி உள்ளார்.