'ஆண்களும் Maggi'யும் ஒரே மாதிரி தான்.. 2 நிமிஷத்துல முடிஞ்சுரும்'.. ரெஜினாவின் அடல்ட் காமெடி Video Viral !
தெலுங்கில் பிரபல இயக்குனர் சுதிர் வர்மா இயக்கத்தில் ரெஜினா, நிவேதா தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘சாகினி டாக்கினி’. South-korean ஆக்சன் - காமெடி திரைப்படமான ‘midnight runners’ என்னும் படத்தின் ரீமேக்.
இதில் ரெஜினா, நிவேதா தாமஸ் இருவரும் போலீஸாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. முதலில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருந்த இந்தப் படம், நாளை (செப் 16) திரையரங்குகளில் வெளியாகிறது.
தற்போது, இதற்காக ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, தலைவி என பல படங்களில் நடித்துள்ள ரெஜினா, சாகினி டாக்கினி படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
அதேபோல், நிவேதா தாமஸ் தமிழில் தர்பார், பாபநாசம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் ப்ரோமோஷனுக்காக தனியார் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் பேட்டியளித்துள்ளனர்.
அப்போது பேசிய ரெஜினா, அசால்ட்டாக சொன்ன அடல்ட் காமெடி தான் தற்போது செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த நிகழ்ச்சியில் சாப்பிட்டபடியே பேசிய ரெஜினா, “நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன், ஆண்களும் மேகியும் ஒரே மாதிரி தான், ஏனென்றால் 2 நிமிடங்களில் இரண்டும் முடிந்துவிடும்” என தெலுங்கில் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு உடனே புரியவில்லை. மழுப்பலாக சிரித்த நிவேதா தாமஸ், ரெஜினா சொன்ன காமெடியை கேட்டு புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், அவரது மழுப்பலான சிரிப்பு, ரெஜினாவின் அடல்ட் காமெடியை ரசித்ததை வெளிப்படுத்தியுள்ளது. ரெஜினாவின் இந்த ஜோக், ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது. ஆண் இனத்தை இப்படி அவமானப்படுத்துவதா என சில நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பொங்கியும் வருகின்றனர்.
#joke by #regina pic.twitter.com/qXgUJIc1vp
— devipriya (@sairaaj44) September 9, 2022