விக்கி – நயனுக்கு ஆப்பு வைத்த ரவீந்தர் - மகாலக்ஷ்மி..? அதுவும் 10 கோடி கிட்ட நஷ்டமா ?
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது.
இதற்காக சுமார் 25 கோடி விலை பேசப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்திற்கு அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், கமல், சமந்தா, த்ரிஷா பல நட்சத்திர பட்டாளங்கள் வருவார்கள் என எண்ணிய நிலையில், அவர்கள் யாரும் வரவில்லை மேலும் விக்கி நயன்தாராவின் கல்யாண வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்தது. இதை அறிந்து கொண்ட netflix நிறுவனம், 25 கோடியில் இருந்து குறைத்து 13 கோடிக்கு தற்பொழுது வாங்க முன்வந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
இவர்களது திருமண வீடியோ இவ்வளவு கம்மியாக இன்னொரு காரணம் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம். தற்போது, சோசியல் மீடியாவில் இவர்கள் திருமணம் குறித்து தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. விக்கி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ரவிந்தர் மற்றும் மகாலட்சுமி புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனால், netflix நிறுவனம், 25 கோடியில் இருந்து 13 கோடிக்கு குறைத்ததாக சொல்லப்படுகிறது.