விஜய் படத்தை காப்பியடித்து எடுக்கபட்டதா வெந்து தணிந்தது காடு ? ஆதாரத்துடன் வைரலாகும் தகவல் !
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சிந்து இதானி, மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். வெந்து தணிந்தது காடு படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உழைத்து உள்ளார் என கூறப்படுகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து சிம்புவின் Transformation ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.
இப்படம் முதல் கலெக்ஷன் சிம்புவின் திரைப்பயணத்தில் சாதனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு, விஜய் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி வருகிறது.
கிராமத்தில் இருந்து கிளம்பும் சிம்பு தன்னுக்கு பிடிக்காமல் கொலை செய்து அந்த காசை தன்னுடைய அம்மாவுக்கும், தங்கைக்கும் அனுப்பி வைக்கிறார். இதுதான் இப்படத்தின் முக்கிய கதை. இதே போல, விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் கதையும் இதே தான் என்று கூறி வருகின்றனர்.
இதனால், விஜய் நடித்து வெளியான நெஞ்சினிலே படத்தை அச்சு அசல் காப்பியடித்து வெந்து தணிந்து காடு திரைப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன் என்று சர்ச்சை எழுந்துள்ளது.