'Rashmika Meal' ஆர்டர் பண்ணினா.. ராஷ்மிகாவே வந்து டெலிவர் பண்றாங்களாமே..
தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் அவர் விளம்பரப்படுத்திய ஒரு உணவு பொருளை ரசிகர்கள் அதிகமாக விரும்பி வாங்கி வருகிறார்கள், என்பதால் அதனை ஒரு தனியார் உணவகத்தில் ராஷ்மிகா மீல் என்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த உணவை அதிக ரசிகர்கள் விரும்பி வாங்கி வருவதால் அவர்களுக்கு ராஷ்மிகா ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.
அதாவது தனது பெயரை வைத்திருக்கும் உணவை விரும்பி சாப்பிடும் தனது ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் மற்றும் சந்தோஷத்தை தான் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஃபுட் டெலிவரி செய்யும் பெண்ணாக தனது ரசிகர்களுக்கு நேரில் சென்று அவர்கள் ஆர்டர் செய்த ராஷ்மிகா மீல்லை டெலிவரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அவரை நேரில் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்பி புகைப்படங்களை எடுத்து வந்தனர்.