சூப்பர்ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தோடு 'சந்திரமுகி 2' தாறுமாறு அப்டேட்டை வெளியிட்ட லாரன்ஸ் !

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

இதன் தொடர்ச்சியாக, ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் 2ம் பக்கத்தில் நடிக்கவுள்ளார் எனவும், இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்குவுள்ளார் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி சில போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆகியது.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

இந்நிலையில் சந்திரமுகி 2வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் படப்பிடிப்பு துவங்கவில்லை, லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரைக்கதையை துவங்கியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன், 2ம் பாகம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

Raghava lawrence shares new update about chandramukhi 2 sharing pictures with rajinikanth

இந்நிலையில், சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன், நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக லாரன்ஸ் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, என்னுடைய தலைவர் மற்றும் குரு ரஜினிகாந்த் அவர்களின் ஆசிர்வாதத்துடன் சந்திரமுகி 2 படப்பிடிப்பு துவங்கவுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Share this post