யுவன் உடன் இணையும் புகழ் ! அடிச்சுது பாரு ஜாக்பாட் ! வெளியான போஸ்டர் !

Pugazh to act as hero in mister zoo keeper film yuvan music director

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடமாக பிரபலமாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பும், சோசியல் மீடியா ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் செம ஸ்ட்ரெஸ்-பஸ்டர் ஷோவாக மாறி மக்கள் கவனம் ஈர்த்தது.

இதனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர்க்கும் நல்ல வரவேற்பு மற்றும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. குறிப்பாக, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பாலா போன்றோருக்கு நல்ல ரசிகர்கள் வரவேற்பு. இதன் மூலம் இவர்களுக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது.

எதற்கும் துணிந்தவன் மற்றும் வலிமை திரைப்படங்களில் புகழ் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த வகையில், தற்போது உச்சகட்டமாக இவரே ஹீரோவாக படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

Pugazh to act as hero in mister zoo keeper film yuvan music director

இதில் ஷிரின்கஞ்வாலா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சுரேஷ் அவர்கள் இயக்கும் இப்படத்திற்கு ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என பெயரிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Pugazh to act as hero in mister zoo keeper film yuvan music director

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பிலிப்பைன்ஸ் நாட்டிலும் படமாக்க உள்ளனர்.

Share this post