இவரு இருக்கும் இடமே கலகலன்னு தான் இருக்கும்.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் புகழ் ! வைரலாகும் போட்டோஸ் !

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஓரமாக எங்காவது நமது முகம் தெரிந்து விட்டால் நிச்சயம் பெரிய பிரபலம் ஆகி விடலாம் என்று பலர் போல எண்ணம் கொண்டு நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் புகழ். லேடி கெட்டப், காமெடியன் என பல வேஷங்களில் பல நிகழ்ச்சிகளில் வந்து போனவர் தான் புகழ். இருப்பினும் அவரை பெரிதும் வரவேற்கும் விதமாக அவருக்கு திருப்புமுனையாக எதுவும் அமையவில்லை.

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

இந்நிலயில், விஜய் தொலைக்காட்சியில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனி ரசிகர் பட்டாளமே பெற்றார். 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இந்நிகழ்ச்சி இருந்தது.

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு காரணம் அதில் பங்கேற்கும் கோமாளிகள் தான். குறிப்பாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, புகழ் என இவர்களுக்கு பேன் பேஸ் உருவானது. இதில் புகழ் சிறிய வயதினர் முதல் பெரியோர் வரை பேவரைட்டாக மாறிவிட்டார்.

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

இவர் முதல் இரண்டு சீசனில் செய்த லூட்டிக்கும் குறும்புத்தனமான சேட்டைகளுக்கும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Pugazh invited for indian cricket player natarajan's home for lunch

இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டுக்கு நடிகர் புகழ் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள நடராஜன், ‘அண்ணன் புகழ் இருக்கும் இடம் கலகலனு தான் இருக்கும். என் அழைப்பை ஏற்று என் இல்லத்துக்கு வந்ததற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Share this post