தலைவர்169 திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ? வெளியான தகவல் !

Priyanka mohan to act as rajinikanth daughter in thalaivar169

கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தளபதி விஜய் வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலயில், பூஜா ஹெக்டே, செல்வராகவன் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் நடுவே, ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான ரஜினியின் 169வது படத்தையும் நெல்சன் இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கான ஓபனிங் பாடலை எழுதி, சில நிமிடங்கள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Priyanka mohan to act as rajinikanth daughter in thalaivar169

இதனைத் தொடர்ந்து, டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்த பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Priyanka mohan to act as rajinikanth daughter in thalaivar169

அதிலும், ரஜினியின் மகளாக நடிக்க, பிரியங்கா மோகனிடம் படக்குழு பேசி வருவதாகவும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் தெரிகிறது.

Share this post