பிரபல தமிழ் VJ மற்றும் சினிமா விமர்சகர் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் பிரபலங்கள் !
சினிமா துறையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், விஜே என பல அவதாரத்துடன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளத்தில் தனக்கென நிறைய ஃபாலோவர்ஸை வைத்திருப்பவர், கௌஷிக்.
ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல. சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு 35 வயதே ஆகும் நிலையில், திடீரென நேற்று மதியம் 12 மணியளவில் கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம், பத்திரிகையாளர்களையும், அவரதும் ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவர் இறக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு கூட, சீதா ராமம் படம் மற்றும் பிரபாஸின் சலார் படத்தின் அப்டேட் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணம் குறித்து அறிந்த நடிகர் கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து, இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Reputed film critic, movie tracker, and Galatta VJ @LMKMovieManiac passed away today, due to cardiac arrest. His demise is a huge personal loss & we here at Galatta extend our heartfelt condolences & strong support to the bereaved family in this hour of grief.#RIPKaushikLM 💔 pic.twitter.com/idv32QDlq7
— Galatta Media (@galattadotcom) August 15, 2022