தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து எல்லாம் பச்சை பொய்.. பூகம்பத்தை கிளப்பிய பிரபல தமிழ் நடிகர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது, சமீப காலமாக, கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த உண்மை தன்மையை இரு குடும்பத்தினர் உறுதிப்படுத்தினால் தான் தெரிய வரும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ்-ஐஸ்வர்யா திருமண நாளான நவம்பர் 18ம் தேதி வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் சமீபத்தில் ஒரு குண்டை போட்டுள்ளார். அதில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றும் சந்தேகப்பட்டால் அதை பெரிய விஷயமாக்காமல் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் விட்டுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இருவரும் கோபத்தில் இப்படியான முடிவை எடுத்துள்ளார்கள்.
இருவருக்கும் மகன்கள் மீதும் இவர்களும், அப்பா - அம்மா மீது மகன்களும் பாசமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து கேஸ் ஒத்துவைப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அனைத்துமே பச்சை பொய் தான். தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்திற்காக நீதிமன்றத்திற்கே செல்லவில்லையாம்.
நீதிமன்றம் செய்திருந்தால் அப்போது இந்த விஷயம் வெளியில் வந்திருக்கும். இருவரும் ஒரே நேரத்தில் பிரிவதாக அறிவித்தார்களே தவிர விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. இருவரும் படித்தவர்கள் குடும்ப பாசமும் குழந்தைகள் மனதை பற்றியும் அவர்கள் உணரக்கூடியவர்கள். இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ ரஜினிகாந்த் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என பயில்வான் கூறியுள்ளார்.