'சில நடிகைங்க டைட்டா ட்ரெஸ் போட்டாலே கேவலமா இருப்பாங்க.. நயன்தாரா நீச்சல் உடை போட்ட கூட..' வர்ணித்த முக்கிய தமிழ் பட பிரபலம்

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. தற்போது, தேனிலவு, விக்னேஷ் சிவன் பிறந்தநாள் என புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

நயன்தாரா நடிப்பில் வெளியான O2 மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படங்கள் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் போன்ற பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முக்கிய பிரபலம் ஒருவர், நயன்தாரா நீச்சல் உடையில் கூட அழகாகத்தான் இருப்பார் என கூறியதாக வெளியான செய்தி செம வைரல் ஆகி வருகிறது.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

தென்னிந்திய சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மூத்த மகள். இவருடைய தங்கை லலிதா குமாரியும் பிரபல நடிகையாக இருந்தவர்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

டிஸ்கோ சாந்தி 1985ம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன்பிறகு, இவர் பல படங்களில் நடித்தும், கவர்ச்சியாக நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதோடு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

popular tamil actress says nayanthara will be looking good in bikini dress

சமீபத்தில் டிஸ்கோ சாந்தி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் நயன்தாரா குறித்து கூறியிருந்தது, உடை என்பது எந்த ஒரு வகையிலும் நடிகையை தவறான கண்ணோட்டத்தில் காட்டாது. உதாரணத்திற்கு, பில்லா படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் வந்திருப்பார். அதில் அவர் மிக அழகாகவும் இருப்பார். அவரை யாராவது வக்கிரமான எண்ணத்தோடு பார்த்தால் கூட முகம் சுளிக்கும் அளவிற்கு அவர் கவர்ச்சி இருக்காது.

ஆனால், ஒரு சிலர் உடல் முழுவதுமாக ஆடைகளை போர்த்திக் கொண்டு வந்தாலும் அந்த உடை இறுக்கமாக இருக்கும்போது பார்ப்பதற்கு கேவலமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this post