'துணிவு.. வெல்வோம்..' பிரபல தமிழ் நடிகரும் நடிக்கிறாரா.. அவரே வெளியிட்ட போட்டோ !
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க குடும்பத்துடன் பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது, அவருடன் எடுத்து கொண்ட புகைபடங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.
தன்னுடைய விடுமுறை நாட்களை கழிந்து விட்டு, திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றிருந்தார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.
நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் கார்கில், ஜம்மு, லடாக், மணாலி, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரைட் மேற்கொண்டு வருகிறார். அஜித் பைக் பயணம் செய்யும் சாலை மேப்பையும் அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவரின் பைக் பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார். வழியில் கோயில்கள், உணவகங்களில் அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. இமயமலைக்கே சென்றாலும் விடாமல் சென்று அஜித்தை சந்தித்து ஆச்சர்யப்படுத்துகின்றனர் ரசிகர்கள்.
அஜித் பைக் டூர் முடிவடைந்தவுடன் AK61 படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், AK61 படத்தின் பெயர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில், படத்தின் பெயர் ‘துணிவு’ எனவும், அதனுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டனர் படக்குழுவினர்.
இந்நிலையில் சமுத்திரகனி தற்போது அஜித்தின் 61வது படமான துணிவு பட போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார். அதில் துணிவு வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார். அதோடு அஜித் உடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் துணிவு படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்பது தெரிகிறது. தற்போது துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது.