பிரம்மாண்டத்தின் உச்சம்.. 'பொன்னியின் செல்வன்' அரண்மனை முதல் அரியாசனம் வரை அடடா பிரம்மிப்பு.. வெளியான BTS வீடியோ!

ponniyin selvan sets making video getting viral on social media

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

ponniyin selvan sets making video getting viral on social media

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

ponniyin selvan sets making video getting viral on social media

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

ponniyin selvan sets making video getting viral on social media

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ponniyin selvan sets making video getting viral on social media

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டர் வெளியிட்டது.

ponniyin selvan sets making video getting viral on social media

இப்படத்தின் ரிலீஸ் விரைவில் நடக்கவிருப்பதால் நடிகர் - நடிகைகள் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது இந்த படத்தின் செட் எப்படி போடப்பட்டது, இதற்காக படக்குழுவினர் மற்றும் கலை இயக்குனரான தோட்ட தரணி ஆகியோர் மேற்கொண்ட சவால்கள் குறித்து விளக்கும் விதமாக, வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பார்பதற்க்கே மிகவும் பிரமாண்டமாக இருக்கும் அரண்மனை செட்டப்புக்காக இவர்கள் போட்ட உழைப்பு, வசீகரிக்கும் அரியசானத்தை உருவாக்கிய விதம் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share this post