'இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்..' அட்லீயை மறைமுகமாக விமர்சித்த பிரபலம் !

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

OTT தளமான அமேசான் ப்ரைம், ராயப்பன் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்யவே, அதற்கு அட்லீ, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என கூறியிருந்தார். இதனால், தளபதி68 அட்லீ தான் இயக்கப்போகிறாரா என்ற பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

இந்நிலையில், அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

சமீபத்தில், ஜவான் படத்தில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் ஒன்று வெளியானது. செப்டம்பர் மாதம் சென்னையில் 25 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. அதில் ஒரு நாள் விஜய் வந்து கெஸ்ட் ரோலில் நடித்து கொடுக்கிறாராம். இதற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் கஷ்யப், பாலிவுட்டில் அட்லீ இயக்கம் குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது. இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர்.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

அனுராக் கஷ்யப் சமீபத்திய பேட்டியில் இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான் என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், தென்னிந்திய படங்களோடு ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன் என அனுராக் கஷ்யப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அனுராக், இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை.

Popular actor anurag kashyap indirectly speaks about atlee directing movie in bollywood

அது கலாச்சாரத்தோடு ஒன்றியே இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் இந்தியில் படம் எடுப்பதனால் அது இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மாறினால் தான் இந்தி படங்களுக்கு வெற்றி கிடைக்கும் என அனுராக் கஷ்யப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வரும் நிலையில், அனுராக் கஷ்யப் மறைமுகமாக தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this post