கம்பீரமான வந்தியத்தேவன் Glimpse ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ !
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டர் வெளியிட்டது.
இப்படத்தின் ரிலீஸ் விரைவில் நடக்கவிருப்பதால் நடிகர் - நடிகைகள் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் செட் மேக்கிங் வீடியோ, Glimpse வீடியோ, ஷூட்டிங் போட்டோஸ் என வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது, பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமும், ஹீரோவும் வந்திய தேவன்தான். அந்த கதாபாத்திரம் தொடர்பாக ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வந்தியத்தேவன் படும் கஷ்டங்களையும், அவன் எப்படி தனக்கான கொடுத்த வேலையை செய்து முடிக்கிறார் என்பது பற்றியும், இந்த ப்ரோமோவில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.