அனிருத் வீட்டில் நடந்த சோக நிகழ்வு.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர் !
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.
3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார்.
தற்போது அனிருத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, அயலான், ஜெயிலர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் அனிருத் முக்கிய நபர் ஒருவர் இறந்தது குறித்து தகவல் வேகமாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, அனிருத்தின் தாத்தா எஸ். வி. ரமணன் அவர்கள் தான் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவர் சினிமாவுலகில் இயக்குனரும், இசையமைப்பாளராகவும் இருந்தவர். அனிருத் தாத்தா இறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அனிருத் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.