இன்னியோட ஒரு வருஷம் ஆச்சு.. அமீருடன் எடுத்த புகைப்படங்களுடன் பாவனி வெளியிட்ட உருக்கமான பதிவு.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது. ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது.
அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வந்தார் பாவனி. அப்படி இவர் தன்னை நிரூபிக்க பங்கேற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 5. இதில் பங்கேற்ற சக போட்டியாளரான அமீருடன் பாவனி காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது.
நிகழ்ச்சியின் போதே காதல் பேச்சுக்கள் அதிகம் வெளியான நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக வெளியே செல்வது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வருகின்றனர். அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அமீர் - பாவனி இருவரும் வெளியே செல்வது, புகைப்படங்கள் எடுத்து பதிவிடுவது என தங்கள் காதலை மறைமுகமாக காட்டி வந்தனர். சமீபத்தில், அமீருடனான காதலை பாவனி ரெட்டியும் உறுதி செய்ய விரைவில் திருமணம் என அதிகாரபூர்வமாக இருவரும் தெரிவித்து விட்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். இதில் இருவரும் செம ரொமான்டிக்காக நடித்திருந்தனர்.
தற்போது அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் நடித்து வருகின்றனர். இச்சூழலில் பாவனி கடந்த நவம்பர் 9ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு முன் நவம்பர் 6ம் தேதி பிறந்தநாள் பார்ட்டியில், பாவனிக்கு நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆனதை நினைவு கூறி, “உன்னை அறிந்து ஒரு வருடம் ஆகிறது. என் வாழ்க்கையை இன்னும் அழகாக்கியதற்கு மிகவும் நன்றி” என அமீரை டேக் செய்து பாவனி பதிவிட்டுள்ளார். அவர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.