'அப்பாவுக்கு முதல்ல சோறுப்போட சொல்லுங்க..' வாரிசு படத்தை தாக்கி பேசிய இயக்குனர்.. viral video
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு 2 ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. வாரிசு திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு திரைத்துறையில் வெளியிட சில பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு பலர் ஆதரவாக விஜய்க்கு பேசி வந்த நிலையில், வாரிசு படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விஜய்யின் வாரிசு அரசியல் - பின்னணி என்ன என்ற வாக்குவாதத்தில் நடிகை கஸ்தூரி, பத்திரிக்கையாளர் பிஸ்மி, பரத், இயக்குனர் பிரவீன் உள்ளிட்டவர்கள் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இயக்குனர் பிரவீன் காந்தி பேசுகையில், விஜய் மீது ஒரு வேண்டுகோள் இருக்கிறது. வாரிசு என்ற அவரது பட டைட்டில், அப்பாவுக்கு பிரச்சனை இருப்பதை சரிசெய்வது குறித்து தான் அப்படம் இருக்கும். வாரிசு என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு அப்பா கூட பேசாமல், சண்டைப்போட்டுக்கிட்டு, சம்பந்தமில்லை என்று கூறி வருகிறார். அது ரொம்ப தப்பான விஷயம்.
எப்படி ரசிகர்களை கூப்பிட்டு சாப்பாடு போட்டு மரியாதை செய்தாரோ, அதேபோல் அப்பாவை கூப்பிட்டு மரியாதை செய்யவேண்டும். அப்பத்தான் வாரிசு என்ற டைட்டிலுக்கு மரியாதை என்று கூறியுள்ளார். ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டிய அன்பை அப்பாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
செதச்சிட்டான் 😹😂 pic.twitter.com/8djzQby8ZV
— シ︎Mʀ.அஜித்தியன் சூர்யா🔥 (@AjithiyanSuriya) November 22, 2022