வீட்டை விட்டு வெளியேறிய கதிர் - முல்லை.. வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ

Pandian stores promo released kathir and mullai out of the house

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

Pandian stores promo released kathir and mullai out of the house

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Pandian stores promo released kathir and mullai out of the house

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

Pandian stores promo released kathir and mullai out of the house

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். குழந்தை பிறக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது.

Pandian stores promo released kathir and mullai out of the house

மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது. முல்லைக்கு குழந்தை இல்லை என்பதற்காக சிகிச்சை செய்ய வெளியில் கடன் வாங்குகின்றனர்.

Pandian stores promo released kathir and mullai out of the house

கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீட்டின் முன் வந்து சத்தம் போட்டுவிட்டு போடவே, ஜீவா மீனா அப்பா கொடுத்த பணத்தை இதற்கு பயன்படுத்துகிறார்.

அப்போது அவரது அப்பா இதை அறிந்து மீனா ஏன் பணம் கொடுக்க வேண்டும் என தடுக்கிறார். தனம் தனது வளையலை அந்த கடனை அடைக்க கொடுக்கிறார். ஆனால் தனத்தின் அம்மா மற்றும் அண்ணன் தடுக்கின்றனர். இப்படி வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.

Pandian stores promo released kathir and mullai out of the house

இதனால், கதிர் தவிர்க்க முடியாத நிலையில், வீட்டை விட்டு கிளம்பும் முடிவுக்கு வருகிறார். ‘முல்லைக்கு செலவு செய்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன், அதற்கு நேரம் கொடுங்கள், நாங்கள் வீட்டை விட்டு போய்விடுகிறோம்’ என கூறி வீட்டை விட்டு கிளம்புகிறார். இந்த ப்ரோமோ வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post