பாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை இவர்தானாம்.. அவருக்கு பதில் இவர்.. போட்டோ இதோ !

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

இந்த சீரியலின் மூலமாக மிகப்பெரிய பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டதால், அவருக்கு பதிலாக காவ்யா முல்லையாக நடித்து வருகிறார். இந்நிலையில், முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

பல நாட்களாக இது குறித்த தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், இவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். அவர் கடைசி நாள் ஷூட்டிங்கில் முல்லையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். இனி அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ரசிகர்களும் அவருடன் நடித்து வரும் சக நடிகர் - நடிகைகளும் அவரை மிஸ் செய்யப்போவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

இதனைத் தொடர்ந்து, அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி புது முல்லையாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. சிப்பிக்குள் முத்து கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.

pandian stores kaavya replaced by new mullai photo getting viral

Share this post