விக்ரம் பட பாணியில் 'ஆரம்பிக்களாங்களா?' என கேட்ட நஸ்ரியா.. கமல், பகத் பாசில் குறித்து பேட்டியில் பேசிய நஸ்ரியா & நானி !

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

தனது சிறு வயது முதலே, தொலைக்காட்சியில் விஜேவாக தனது கலை பயணத்தை தொடங்கியவர் நடிகை நஸ்ரியா. இதனைத் தொடர்ந்து, மலையாள மொழி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

தொடர்ந்து, 3 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மாட் டாட் என்னும் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின்னர், தமிழில் நேரம் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தமிழ் ரசிகர்களுக்கு இவரது க்யூட்னஸ், expressions அனைத்தும் பிடித்து போக கிரஷ் ஆக மாறிவிட்டார்.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

ராஜா ராணி, நையாண்டி வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் ஓம் ஷாந்தி ஓசானா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்கள் அனைத்து ரசிகர்களாலும் இவரது நடிப்பிற்காகவே படம் செம ஹிட் ஆனது.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

திருமணத்திற்கு பிறகு, குறைந்த படங்களில் நடிக்கும் நஸ்ரியா, தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்திம், தெலுங்கில் ‘அன்டே சுந்தரனக்கி’, மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’, அடடே சுந்தரா என்னும் பெயரில் தமிழிலும் எடுக்கப்படுகிறது.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கி உள்ள இந்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சுந்தராக நானியும், லீலாவாக நஸ்ரியாவும் காமெடி, காதல் என டிரைலரில் பட்டையைக் கிளப்பி இருந்தனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

இந்நிலையில், நானி மற்றும் நஸ்ரியா, பிரபல ஆன்லைன் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தனர். இதில், இருவரும் தங்களின் ஆரம்பகால நடிப்பு பயணம் குறித்து பேசி இருந்தனர். தொடர்ந்து, நஸ்ரியா - பகத் திருமணம் குறித்து பேசிய நானி, “நான் பெங்களூர் டேஸ் திரைப்படத்தை பார்த்துள்ளேன். இதன் பின்னர், நஸ்ரியா - பகத் திருமணம் பற்றி கேள்விப்பட்டேன். உடனே, பெங்களூர் டேஸ் படத்தின் போது, இருவருக்குள்ளும் காதல் உருவாகி இருக்கலாம் என நினைத்தேன்” என கூற, இதற்கு நஸ்ரியாவும், “சரியான பதில்” என கூறினார்.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

தொடர்ந்து பேசிய நஸ்ரியா, “நானும் பகத்தும் முன்பே அறிமுகம் ஆனவர்கள். ஆனால், பெங்களூர் டேஸ் படப்பிடிப்பின் போது தான் காதல் உருவானது. நானும், பகத்துக்கும் கூட நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என நினைக்கவில்லை” என தெரிவித்தார்.

Nazriya speaks about kamal haasan fahadh fasil and vikram movie in adade sundar interview

தொடர்ந்து, ரிலீஸ் ஆகியுள்ள விக்ரம் திரைப்படம் குறித்து பேசிய நானி, “சென்னை தான் விக்ரம் படம் பார்க்க சரியான இடமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். Interview-வை நேரத்திற்கு முடித்து விட்டு விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்” என கூறினார்.

Share this post