மருதாணி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கிய விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்..!

Nayanthara Vignesh Shivan Marriage Mehandi Function Photos Viral

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.

Nayanthara Vignesh Shivan Marriage Mehandi Function Photos Viral

அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக விக்னேஷ் சிவன், இவரது 2வது திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இதன் பின்னர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.

திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கிடையே விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Nayanthara Vignesh Shivan Marriage Mehandi Function Photos Viral

Nayanthara Vignesh Shivan Marriage Mehandi Function Photos Viral

இந்த நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு தண்ணீர் பாட்டிலில் மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்டுள்ளது.

Share this post