ரக்க்ஷாபந்தன் கொண்டாடிய நயன்தாரா.. யாருக்கு ராக்கி கயிறு காட்டியுள்ளார் தெரியுமா?

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்களின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியாகவுள்ளது குறித்து netflix டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டது. நயன்தாரா தற்போது ஜவான், கோல்டு, காட்பாதர், நயன்தாரா75 போன்ற பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

இன்று நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. திரை உலக பிரபலங்கள் குறிப்பாக பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Nayanthara raksha bandhan celebration video getting viral on social media

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ராக்கி கயிறு கட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு ஒரு பெண் ராக்கி கயிறு கட்டுவதும், அந்த பெண்ணுக்கு நயன்தாரா ராக்கி கயிறு கட்டும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Share this post