நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா ? இவங்க தானாம் !
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், அக்டோபர் 9ம் தேதி, திடீரென விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில், நயனும் நானும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என போட்டோவுடன் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்ப்பமாக நயன்தாரா இல்லை, திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆகியுள்ளது, அப்புறம் எப்படி என ரசிகர்கள் முதல் அனைவரும் குழம்பியுள்ள நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தான் தற்போது சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது.
வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின்னர், கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை இருக்கும் பக்கத்தில் தான், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில விதிமுறைகளும் உள்ளது.
ஆனால், நயன் - விக்கி இருவரும் அதற்கான வழிமுறைகளை பின்பற்றினார்களா? அல்ல சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனரா என சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுக்கு வாடகை தாயாக இருந்தவர் யார்? என்கிற தகவல் கசிந்துள்ளது.
அவர் கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உறவினராம். ஆனால் நயன்தாராவிற்கு எந்த முறையில் உறவினர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் அவருக்கு வாடகை தாயாக இருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்த பிறகு தான், அதற்கான செயல்பாடுகள் துவங்கியதாக கூறப்படுகிறது.