Viral Video: ‘Normal Delivery'ல தான் இப்படி இருக்க முடியும்’.. மதுமிதா பேச்சால் திட்டி தீர்க்கும் தாய்மார்கள் !

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்ததன் மூலம் செம பிரபலம் ஆனார். ஜாங்கிரி என்னும் கதாபாத்திரத்தில் வரும் இவர், இந்த கதாபாத்திரம் மூலம் செம பேமஸ் ஆனார். இதற்காக சிறந்த பெண் காமெடியன் விருதையும் பெற்றார்.

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

இதனைத் தொடர்ந்து, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஞ்சனா 2, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 25திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார்.

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின் இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்றும் கூறி இருந்தார்.

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

பின் இறுதி போட்டியில் கூட மதுமிதா கலந்துகொள்ளவில்லை. இதனிடையே நடிகை மதுமிதா கடந்த 2019ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மதுமிதா இறுதியாக விஜய் சேதுபதி- டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்து இருந்தார். இதன் பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

இப்படி ஒரு நிலையில், மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்நிலையில் குழந்தை பிறந்தது குறித்து மதுமிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ‘நார்மல் டெலிவரி மூலம் மட்டும் தான் குழந்தை மிக ஆக்டிவாக இருக்கும். ஆப்ரேஷன் செய்யும் போது நன்றாக இருக்கும். ஆனால், வாழ்நாள் முழுவதும் அந்த வலியை அனுபவிக்க வேண்டும். அழுது பெற்றால் தானே அவள் அம்மாவாகிறாள்’ என்று மதுமிதா கூறி இருந்தார்.

new mommies and c section mommies slams jankiri madhumitha for her speech on c section delivery

இப்படி இவர் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் திட்டி கொண்டு வருகின்றனர். அதிலும் சிலர், உனக்கு என்ன தெரியும் சி - செக்சன் பத்தி, எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே, ஆபரேஷன் செய்தவர்களும் ஆரோக்கியமாக நன்றாகத் தான் இருக்கிறார்கள், அந்த குழந்தைகளும் நன்றாக தான் இருக்கிறது என்று பலரும் மதுமிதாவை திட்டி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Share this post