அடுத்தடுத்து சர்ச்சையில் விக்கி - நயன்.. நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு.. விதிகளை மீறி போட்டோஷூட்.. செருப்புடன் வலம் வந்தது என எழும் புகார்..

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற விக்கி - நயன்தாரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

இந்நிலையில், திருப்பதியில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி போட்டோசூட் நடத்தியது குறித்து புகைப்படத்தோடு தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி, ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது.

Nayanthara and vignesh shivan got complaint from tirupati devasthanam for wearing chappal in temple premises and photoshoot in restricted areas

எனவே இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கட்டுப்பாடுகளை அவர்களிடம் தெரிவித்து அவர்களை அப்புறப்படுத்த தவறி விட்டனர்.

எனவே அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Share this post