மைக் மோகன் ரீஎன்ட்ரி படத்தில் ஜோடியாக நடிக்கும் குஷ்பூ..! வெளியான போஸ்டர்..!

Mike mohan and kushboo to act in upcoming new tamil film

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பூ. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர். சற்று பப்ளியாக இருந்த குஷ்பூ, ஸ்லிம் பிட்டான நடிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றியவர்.

இப்படி பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்கு பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு, சமீபகாலமாக கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கீங்க, இப்போ கூட ஹீரோயினா நடிக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். தற்போது அவர்களின் வாக்கு பலிக்க, புதிய படம் ஒன்றில் 80’ஸ் நாயகன் மைக் மோகன்’க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் மைக் மோகன், ஹரா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தாதா 87, பவுடர், பப்ஜி போன்ற படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Mike mohan and kushboo to act in upcoming new tamil film

இவர்கள் இருவரும் 1988ம் ஆண்டு வெளியான ஆத்ம கதா என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தாலும், தமிழில் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post