தமிழ் பாடகி அவதாரம் எடுத்த மஞ்சு வாரியர்.. வைரலாகும் வீடியோ!

Manju warrier sings tamil song for the first time

நடன கலையை முறையாக கற்று தேர்ந்த நடிகை மஞ்சு வாரியர், தூர்தசனில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான Moharavam என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இதனைத் தொடர்ந்து, இவருக்கு 3 வருட காலத்தில் 20 திரைப்படங்களில் நடித்தார்.

மலையாள மொழியில் சாக்ஷ்யம் என்னும் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்த இவர், அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

Manju warrier sings tamil song for the first time

நிறைய திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம், மலையாள நடிகர் திலிப் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது, தனது வயதை தாண்டி செம க்யூட்டாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மலையாள மொழியில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியார், வயது 40திற்கு மேல் ஆனாலும் பார்க்க அதே அழகுடன் இருப்பது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

மலையாள மொழியில் ஏகப்பட்ட படங்களில் நடித்து நிறைய பேரின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் இவர், மொழிகள் கடந்து ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்திருக்கிறார்.

தமிழ் மொழியில் அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Manju warrier sings tamil song for the first time

இதைத் தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் உருவாக்கி இருக்கும் ‘சென்டிமீட்டர்’ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிம் கிம் கிம்“ என்ற பாடலை நடிகை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குநர் அவதாரம் எடுத்து உருவாக்கியிருக்கும் சென்டிமீட்டர் திரைப்படம்.

தமிழ் மற்றும் மலையாளம் எனும் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் மே 20ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் தமிழில் முதல் முறையாக பாடி வெளியான “கிம் கிம் கிம்“ பாடலைப் ரசிகர்களுக்காக 2 வரிகள் பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share this post