உடல்எடை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம்..!

Kannada actress chetana raj died after fat removal plastic surgery

கீதா, டோரேசனி போன்ற கன்னட சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சேத்தனா ராஜ். 21 வயதாகும் சேத்தனா தனது உடல் எடையை அறுவை சிகிச்சை மூலம் குறைக்க முடிவு செய்துள்ளார்.

இதனை பெற்றோருக்கு தெரியாமல் செய்து முடிக்க எண்ணிய அவர், பெங்களூரு ஷெட்டி மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கொழுப்பை குறைக்க, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையை கொடுத்துள்ளனர்.

Kannada actress chetana raj died after fat removal plastic surgery

சிகிச்சையின் போது அவர் சுயநினைவை இழந்ததால் பதற்றமடைந்த மருத்துவர்கள் அவரை அருகில் உள்ள காடே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அங்கு அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து ஐசியூவில் வைத்து 45 நிமிடம் அவசர சிகிச்சை அளித்தபோதும், எந்தவித பலனும் இன்றி அவர் உயிர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

ஷெட்டி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையும், அலட்சியமுமே தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என சேத்தனாவின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை திடீரென மரணமடைந்திருப்பது கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகை சேத்தனா ராஜின் மறைவுக்கு அவரது ரசிகர்களும், கன்னட திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kannada actress chetana raj died after fat removal plastic surgery

Kannada actress chetana raj died after fat removal plastic surgery

Share this post