'மாமன்னன்' படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியிட்ட மாரி செல்வராஜ் !

Mamannan update released by maari selvaraj

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். கர்ணன்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் மாரி செல்வராஜ்.

Mamannan update released by maari selvaraj

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது.

சமீபத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வடிவேலு வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்ததை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டியுள்ளனர். அதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Mamannan update released by maari selvaraj

Share this post