"'நம்பி நாராயணன்' தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்" - நடிகர் மாதவன் பளீர்

Madhavan reveals about nambi narayanan in the press meet

ஒரு காலத்தில் பேவரைட் க்ரஷ், சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். தற்போது அவ்வளவு திரைப்படங்களில் நடிக்காத மாதவன், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’.

Madhavan reveals about nambi narayanan in the press meet

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் இது. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Madhavan reveals about nambi narayanan in the press meet

கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் சார்பில் உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியாக போகிறது.

Madhavan reveals about nambi narayanan in the press meet

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் நடிகர் மாதவன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் உரையாடிய பிறகு, படத்தின் முழு ஸ்கிரிப்டையும் மாற்ற வேண்டியிருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

Madhavan reveals about nambi narayanan in the press meet

உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நீதி பெற பல ஆண்டுகள் போராடினார் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madhavan reveals about nambi narayanan in the press meet

நம்பி நாராயணன் அவர்களை சந்தித்து பேசிய பிறகு தான், அமெரிக்காவில் உள்ள லீக் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும், மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணிபுரிந்த அனுபவமும் அவருக்குத் தெரிந்தது என்றும் மாதவன் கூறினார்.

Madhavan reveals about nambi narayanan in the press meet

மேலும் நம்பி நாராயணனின் கண்ணீரைப் பார்த்த அன்றுதான் இந்தக் கதையை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணன் போதிய அங்கீகாரம் கிடைக்காமல், பொய்யான குற்றச்சாட்டினால் அவரது குடும்பம் சந்தித்த அவமானத்தை உணர முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Madhavan reveals about nambi narayanan in the press meet

உண்மையை நிரூபிக்க போராடும் விஞ்ஞானியின் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது கதையை திரைப்படமாக்க முடிவு செய்ததாக நடிகர் மாதவன் மனம் திறந்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது மாதவன் கூறியதாவது, “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.

அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன்” என அவர் கூறியுள்ளார் .

Share this post