"நம்பாம உள்ள போறவங்களுக்கு இதுதான் நிலைமை.." 'மாயோன்' பட திகிலூட்டும் ஸ்னீக் பீக் வீடியோ !

Maayon sneak peek video getting trending on social media

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

Maayon sneak peek video getting trending on social media

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட சார்பில் நடிகர் சிபி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாயோன்’. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

Maayon sneak peek video getting trending on social media

மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Maayon sneak peek video getting trending on social media

2008ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் கடவுள் இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்கிறேன் என்ற வசனம் கமல் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாக வசனம் இந்த கருத்துக்கு தற்போது மாயோன் படக்குழுவினர் பதில் தெரிவித்துள்ளனர்.

Maayon sneak peek video getting trending on social media

இந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு மாயோன் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மாயம் மாயோன் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த படம் ஜூன் 24ம் தேதி வெளியாகிறது.

Maayon sneak peek video getting trending on social media

புதையல் வேட்டை, சிலை கடத்தல் என சுவாரசியமும், பரபரப்பும் நிறைந்த த்ரில்லர் படமாக மாயோன் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் படத்திற்காக புதுவித புரொமோஷனில், இதற்காக ரதம் ஒன்று படத்தில் வருவது போன்று அமைக்கப்பட்டு அதில் விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Maayon sneak peek video getting trending on social media

இந்த ரதம் தொடர்ந்து 26 நாட்கள் எனத் திட்டமிட்டு தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

Share this post