நெல்சனிடம் ட்விட்டரில் 'Beast Update' கேட்ட லோகேஷ்.. வைரலாகும் பதிவு

Lokesh kanagaraj requests for beast update to nelson dilipkumar

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி திரைப்படத்தின் மூலம் நல்ல பிரபலம் அடைந்தார். வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இவர், விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

Lokesh kanagaraj requests for beast update to nelson dilipkumar

தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்தார்.

Lokesh kanagaraj requests for beast update to nelson dilipkumar

இதற்கு நன்றி கூறி ’பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Lokesh kanagaraj requests for beast update to nelson dilipkumar

Share this post