Kaithi 2 Update: கைதி'ல கார்த்தி கைல இருக்க கட்டப்பைல இதுதான் இருக்கும்.. அதுதான் 'கைதி 2' லீட்.. சக்ஸஸ் மீட்டில் லோகேஷ் வெளியிட்ட அப்டேட்..

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

மேலும், படத்தின் வசூல் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் லோகேஷ் மற்றும் கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதிலளித்தனர். அதில் அவரிடம், கைதி 2 குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த லோகேஷ், கைதி 2 படத்திற்கான லீட் குறித்து கூறியுள்ளார்.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

லோகேஷ் கூறுகையில் ‘கைதி படத்தில் கார்த்தி கையில் ஒரு கட்டப்பை இருக்கும், அதில் இருப்பது எல்லாம் அவர் ஜெயிலில் கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகள். அவர் ஒரு கபடி ப்ளேயர், இதை வைத்து தான் கதை தொடரும்’ என கூறி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தளபதி67 திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2 தொடங்கப்படும் எனவும் பேசப்படுகிறது.

Lokesh kanagaraj opens up about kaithi 2 story from kaithi climax

Share this post