'விஜய் சேதுபதி கொல செஞ்சுட்டு அசால்ட்டா மீன் சாப்பிடுற மாதிரி சீன்'.. எல்லாம் Cut பண்ணி தூக்கிட்டாங்க.. மைனா நந்தினி பேட்டி !
கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.
பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.
போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.
பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.
கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
மேலும், படத்தின் வசூல் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்த மைனா நந்தினி விக்ரம் படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், 2 சீன்கள் இவர் நடித்தது நீக்கப்பட்டுள்ளது. அது ரெண்டுமே விஜய் சேதுபதி ஓட கேரக்டர் படத்துல எப்படினு சொல்லுற மாதிரி சீன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.