டிரைலரை விட படம் மொக்க : 'லைகர்' பட Review.. இணையத்தில் வைரல் !

liger review from fans getting viral

சின்னத்திரை சீரியல் இயக்குனராக தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் தேவரக்கொண்டா, Nuvvila என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். Life is Beautiful, Yevade Subramanyam போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

liger review from fans getting viral

பின்னர், Pelli Choopulu என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரும் பிரபலம் அடைந்தார். இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து, Ye Mantram Vesave, நோட்டா, World Famous Lover, Dear Comrade, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

liger review from fans getting viral

தற்போது, சமந்தாவுடன் குஷி, பூஜா ஹெக்டேவுடன் Jana Gana Mana, Liger போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் Liger திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்து வருகிறார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

liger review from fans getting viral

இயக்குநர் கரண் ஜோஹர், புரி ஜெகநாத், நடிகை சார்மி தயாரித்துள்ளனர். இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார்.

liger review from fans getting viral

இப்படம் இன்று வெளியாகி அதிகாலை 4 மணி காட்சி பார்த்த பலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலரை விட படம் மொக்கையாக இருக்கிறது என்றும், பாதியிலேயே தூங்கி விட்டேன் என்றும், மைக்டைசனை விஜய்தேவரகொண்டா அடித்து உதைப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் குத்துச்சண்டை படம் என்பதற்கான எந்த விஷயமும் இல்லை என்றும் தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post