பிரபல தமிழ் ஹிட் திரைப்பட இளம் இயக்குனர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களிடம் பணியாற்றியவர் மணி நாகராஜ். இவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான பென்சில் திரைப்படத்தை இயக்கியவர். இளம் வயதினரான இவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை மணி நாகராஜ் இயக்கியிருந்தார். 2013ம் ஆண்டு, மலையாள மொழியில் வெளியான Zachariayude Garbhinikal என்னும் சூப்பர் ஹிட் காமெடி திரைப்படத்தின் ரீமேக்.
இதில் நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுதார், சீதா போன்ற பிரபலங்கள் நடித்து வந்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது.
Share this post