அஸ்வினுடன் மிரள வைக்கும் லுக்கில் கோவை சரளா.. ஷாக் கொடுக்கும் பிரபுசாலமனின் ‘செம்பி’ பட பர்ஸ்ட் லுக் !

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

கோவையில் பிறந்து வளர்ந்த அஸ்வின், நடிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தினால், விடா முயற்சி எடுத்து சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர்.

இதனைத் தொடர்ந்து, ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற தமிழ் சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

மேலும், சரவணன் மீனாட்சி தொடரின் ரீமேக் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

பின்னர், பிளிங்க், சிண்ட்ரெல்லா, 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி, காதல் ஒன்று கண்டேன் போன்ற குறும்படங்களில் நடித்தார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் செம பேமஸ்.

விஜய் தொலைக்காட்சியில், குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த அஸ்வின், இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்கு உண்டாக்கியது.

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, சுனிதா, புகழ் உடன் இவரது சில காமெடி, வீடியோக்களாக இன்னும் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பின்னர், பட வாய்ப்புகளும் பெற துவங்கிய இவர் ம்யூசிக் வீடியோவிலும் நடித்து வருகிறார்.

குட்டி பட்டாசு, யாத்தி யாத்தி என 2 மியூசிக் வீடியோக்கள் இவர் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த நிலையில், பேபி நீ சுகரு என்னும் ம்யூசிக் வீடியோவில் கல்லூரி மாணவராக பேராவல் டே அன்று லாஸ்லியாவிடம் அஸ்வின் காதலை சொல்லும் ரொமாண்டிக் பாடலாக அமைந்து செம வைரல் ஆனது.

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது, மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்த பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதன் போஸ்டர் இன்று வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், செம்பி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மாஸ் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோவை சரளா கெட்அப் வித்தியாசமாக இருக்கும் நிலைமையில் படத்தின் எதிர்பார்ப்பை இப்போதே கூட்டியுள்ளனர் படக்குழுவினர்.

Kovai sarala and ashwin to act in prabhu solomon sembi first look poster viral

Share this post