'எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க மேடம்..' நடிகை ரோஜாவிடம் கோரிக்கை வைத்த முதியவர்.. வைரலாகும் வீடியோ !

Old man requests to andhra minister actress roja for marriage

90ஸ் களில் டாப் முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. திருப்பதியில் பிறந்து வளர்ந்த இவர், முறையாக குச்சிப்புடி கற்று தேர்ந்தவர். இதன் மூலம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மூலம் செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியன், வீரா, ஆயுத பூஜை, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் 90ஸ் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அர்ஜுன், சரத் குமார், பிரபு ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

Old man requests to andhra minister actress roja for marriage

நன்றாக டான்ஸ் ஆட கூடிய ரோஜா, மேலூர் மாமன் மற்றும் மஸ்தானா மஸ்தானா போன்ற பாடல்களில் ஆடியதன் மூலம் நல்ல பிரபலம் அடைந்தார்.

தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோஜா, பின்னர், துணை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அரசு, பாரிஜாதம், காவலன், சகுனி போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Old man requests to andhra minister actress roja for marriage

மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக, நடுவராக பங்கேற்று வந்தார். 2002ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

Old man requests to andhra minister actress roja for marriage

திடீரென அரசியல் பிரவேசம் செய்த ரோஜா, தெலுங்கு தேசம் பார்ட்டியில் 1999ம் ஆண்டு இணைந்த இவர், 2009ம் ஆண்டு YSR காங்கிரஸ் பார்ட்டியில் சேர்ந்தார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் தங்களின் சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று, மக்கள் குறைகளைக் கேட்டுவரும்படி உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், ரோஜா தனது சட்டமன்ற தொகுதியான நகரியில் மக்களின் குறைகளைக் கேட்டுவந்தார்.

Old man requests to andhra minister actress roja for marriage

அப்படி, ஒவ்வொரு வீடாக விசாரித்து வந்தபோது, முதியவர் ஒருவரிடம், முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அந்த முதியவர் உதவித்தொகை கிடைக்கிறது, ஆனால் வயதான காலத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள தான் யாருமில்லை. எனவே எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டார்.

முதியவரிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத நிலையில், அங்கிருந்தவர்கள், உடனே சிரித்து விட்டனர். அதன் பிறகு முதியவரிடம் அரசினால் உதவித்தொகை மட்டுமே வழங்க முடியும், திருமணமெல்லாம் செய்து வைக்க முடியாது என பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

Old man requests to andhra minister actress roja for marriage

முதியவரின் இந்தக் கோரிக்கை அந்த இடத்தில் சிறிது நேரம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியதோடு, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post